ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்

தரம் 01 மாணவர்கள் வருகை

hs7.png
hs7.png

அதிபர் செய்தி

திரு. எம். மனோகரன் (SLPS - II)

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி என்னும் பிரதேசத்திலிருந்து 3 km தூரத்தில் அமைந்துள்ள மட்/மட்/ ஐயன்கேணி தமிழ் வித்தியாலயம் தற்போது மட்/மட்/ ஐயன்கேணி தமிழ் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டு 15 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலையானது தற்போது 426 மாணவர்களைக் கொண்டுள்ளதுடன் உயர்தரத்தில் கலைப்பிரிவானது ஆரம்பிக்கப்பட்டு 07 மாணவர்களை பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிக்கு செல்வதற்கான ஒரு நீண்ட கால கனவை நனவாக்கி உள்ளமையூம் எமது பாடசாலையின் ஒரு மைல்கல்லாகும். 

மேலும் இவ்வருடம் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் வணிகக் கல்வி பாடத்தினை கற்று பரீட்சைக்கு தோற்றியூள்ளதனால் எதிர்காலத்தில் உயர்தரத்தில் வணிகப் பிரிவையூம் எமது பாடசாலையில் ஆரம்பிக்கலாம் என்பதும் பெருமைக்குரிய விடயமே. பின்தங்கிய இக்கிராமத்தில் எமது பாடசாலையின் தூரநோக்கிற்கமைவாக சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குவதற்குரிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை எமது பாடசாலையானது கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வருகின்றது. 

எமது பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்  உருவாக்கப்பட்டமை எமது பாடசாலையின்  வரலாற்றில் சிறப்பு முத்திரை பதிக்கப்பட்டு போற்றப்படும் என்பது என் எண்ணமாகும். இதன் மூலம் பாடசாலையின்  சாதனைகளையும், நினைவுகளையும் பதிவு செய்யவும் பாதுகாக்கவும் ஏற்ற ஊடகமாக இவ் இணையத்தளம்  எதிர்காலத்தில் அமையும் என்பது எமது நம்பிக்கையாகும். 

திரு. எம். மனோகரன் (SLPS - II)
அதிபர்
ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்.