இப் பாடசாலையின் வரலாற்றை நோக்கும்போது இற்றைக்கு சுமார் ஐந்து தசாப்த காலங்களுக்கு முன்னர் அதாவது, 1961.05.04 இல் தற்காலிகமான ஓலைக் குடிசையொன்றில் திரு.சி. இளையதம்பி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. மட்/ஐயன்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் ஆண், பெண் மாணவர்கள் தலா 15 பேருடன் ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது திரு.சு.வேதாரணியம் என்பவர் அதிபராக் கடமையாற்றியுள்ளார்.






