ஐயன்கேணி தமிழ் மகா வித்தியாலயம் அனுதினம் ஓங்குகவே
தெய்வத்தை தொழுது நித்தமும் நாங்கள்
தேசத்தில் உயர்ந்திடுவோம் - ஐயன்கேணி
கற்பிக்கும் ஆசான் சொற்படி நடந்து
கல்வியை கற்றிடுவோம்.
அற்பசெயல்களில் கண் செலுத்தாது
ஐக்கியமாய் வாழ்வோம் - ஐயன்கேணி
அறிவியலோடு ஆங்கிலம் தமிழை
ஆனவரை பயில்வோம்.
நெறியுடன் என்றும் குறி தவறாமல்
நேர்மைக்கு உழைத்திடுவோம் - ஐயன்கேணி
பண்ணும் பரதமும் பயின்றிடுவோமே இந்த
பாரினில் தலை நிமிர்வோம்.
எண்ணோடு எழுத்தை கண் என மதித்து
என்றும் கற்றிடுவோம் - ஐயன்கேணி