ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயம்

தரம் 01 மாணவர்கள் வருகை

hs7.png
hs7.png

1961.05.04 - 1961.12.31

திரு. சு. வேதாரணியம்

எமது பாடசாலையின் முதலாவது அதிபர். கற்றல் அறிவு மட்டம் குறைந்த சமூகத்திலிருந்து வீடு வீடாக சென்று மாணவர்களை உள்வாங்கி பாடசாலையினை ஆரம்பிப்பதில் முன்னோடியாக செயற்பட்டார் . தரம் 01 இல் 15 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

1962.01.01- 1965.12.31

திரு. இ. இராசமாணிக்கம்

இவரது காலப்பகுதியில் தரம் 5 வரையில் மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.

1966.01.01 - 1968.04.03

திரு. இ. ராஜகோபால்

இவரது காலப்பகுதியில் தரம் 5 வரையில் 60 மாணவர்களை கொண்டு பாடசாலை இயங்கியது.

1968.04.04 - 1971.01.02

திரு. சு . சோமசுந்தரம்

இவரது காலப்பகுதியில் தரம் 5 வரையில் மாணவர்களை கொண்டு பாடசாலை இயங்கியதுடன் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் சேர்வு வீதம் அதிகரிக்க செய்யப்பட்டது.

1971.01.03 - 1973.12.31

திரு. சு . சுப்பிரமணியம்

இவரது காலப்பகுதியில் தரம் 5 வரையில் மாணவர்களை கொண்டு பாடசாலை இயங்கியதுடன் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் சேர்வு வீதம் அதிகரிக்க செய்யப்பட்டது.

1974.01.01 - 1987.01.03

திரு. சு . திருநாவுக்கரசு

இவரது காலப்பகுதியில் தரம் 5 வரையில் மாணவர்களை கொண்டு பாடசாலை இயங்கியதுடன் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் சேர்வு வீதம் அதிகரிக்க செய்யப்பட்டது.

1987.01.03 - 1998.12.27

திரு. ச. ம. ஜோன்சன்

இவரது காலப்பகுதியில் தரம் 1 தொடக்கம் 9 வரையில் மாணவர்களை கொண்டு பாடசாலை இயங்கியதுடன் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் சேர்வு வீதம் அதிகரிக்க செய்யப்பட்டது.

1998.12.28 - 1999.04.25

திரு. பா . பி . பிரின்சிலி

இவரது காலப்பகுதியில் தரம் 1 தொடக்கம் 9 வரையில் மாணவர்களை கொண்டு பாடசாலை இயங்கியதுடன் தற்காலிகமான அதிபராக செயற்பட்டார்.

1999.04.26 - 2008.12.15

திரு. க . ஞானேஸ்வரன்

இவரது காலப்பகுதியில் தரம் 10 இற்கான அனுமதி கிடைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் தரம் 1 முதல் 10 வரையில் மாணவர்களை கொண்டு பாடசாலை இயங்கியது.

2008.12.16 - 2010.06.08

திரு. தி . ரவீந்திரா

தற்காலிகமான அதிபராக செயற்பட்டார். இவரது காலப்பகுதியில் தரம் 11 இற்கான அனுமதி கிடைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

2010.06.09 - 2015.01.15

திரு. ச . ஜெயராஜா

இவரது காலப்பகுதியில் தரம் 11 இற்காக மாணவர்கள் தேசிய பரீட்சைக்கு தோன்றினர். மேலும் இவரது காலப்பகுதியில் பாடசாலையின் விளையாட்டுத்துறை முன்னேற்றம் கண்டிருந்தது.

2015.01.15 - இன்று வரை

திரு. எம். மனோகரன்